search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.

    இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் 25-ந்தேதி கனமழையும், 26-ந்தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது அதே பகுதியில் நீடிக்கிறது.
    • குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 2 நாட்களில் மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    * தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.

    * குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 2 நாட்களில் மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது.
    • மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் 2-வது சுற்றுக்காக காத்திருக்கும் சூழலில், அதற்கான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த 6 அல்லது 7-ந் தேதிகளில் உருவாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் 8, 9-ந் தேதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் உருவாகவில்லை. இப்படியாக 3 முறை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால்தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
    • வரும் 12-ந்தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    * தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    * குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    * வரும் 12-ந்தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
    • நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

    தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

    காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    புதுடெல்லி:

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது.

    இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    • டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது.

    கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    • வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
    • நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கனமழை காரணமாக கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
    • பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை புயலாக வலுவடைய உள்ளதால், கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாலசோர், பத்ரத், கோஜ்பூர், சேந்திரபாத், ஜகத்சிங்பூர், பூரி, கட்டாக், கோர்தா கஞ்சம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 24-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    டானா புயல் வியாழன் அன்று தீவிர புயலாக மாறுவதால் மக்கள் பீதி அடையாமல் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்குவதற்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

    மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ×